Saturday, November 30, 2013

பகிர்வதற்கு முன்னர்

நிகழ்வது அனைத்தும் அல்லது  செய்யப்படுவது அனைத்தும் சரியோ அல்லது தவறோ என எங்கும் வரையறுக்கப்படவில்லை. அனைத்தையும் நாமே உருவாக்கிக் கொண்டோம். சரிகள், பிழைகள், விதிகள், தவறுகள், வழிகள் என அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. எனவே அனைத்தையும் குறுக்காக சிந்திக்க மனம் முயல்கிறது. சமுகத்தின் பார்வையில் தீமைகள் எனப்படுபவற்றை இரகசியமாகவும் பரகசியமாகவும் செய்பவனாகவும், அவ்வப்போது சமூக ஓட்டத்தில் கலகம் செய்ய முற்படுபவனாகவும், எனினும் சமூகத்திலேயே அடங்கி ஓடுபவனாகவும், நல்லவன் எனப்படுபவனாகவும், கெடடவன் எனப்படுபவனாகவும், இரக்கம், கோபம், அன்பு, ஆதிக்கம், புகழ் விருப்பம், விட்டுக்கொடுப்பு, பொறாமை என அனைத்தையும் நேரத்துக்கு நேரம் கொண்டிருப்பவனாகவும் பிறந்த நோக்கத்தை அறிய ஆவலுள்ள வனாகவும் அதற்காக மிக மெதுவாகவே முயல்பவனாகவும் வாழும் ஒரு மனித விலங்காக என் புரிதல்களை பகிர முயல்கிறேன். 

மனிதர்களை புண்படுத்தி உண்மைகளை உரைக்கும் அளவுக்கு மனத்தைரியம் இதுவரை இல்லாததால் அவ்வாறான அனைத்தையும் தவிர்த்துவிடுகிறேன். காலப்போக்கில் தைரியம் கிடைத்தால் அதையும் இடுவேன்.